பக்கங்கள்

Thursday, July 4, 2013

வைகை எக்ஸ்பிரஸுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் அடையாளம் தெரிந்தது!

திருச்சி: வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் யார் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
மதுரையிலிருந்து திருச்சி வழியாக நேற்று காலை சென்னை சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம ஆசாமி ஒருவர் தகவல் கொடுத்தார். உடன் திருச்சி ஜங்சனில் வைத்து ரெயிலை சுமார் 2 மணிநேரம் சோதனையிட்டதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது.

உடன் தனிப்படை காவல்துறையினரின் விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரின் செல்போன் எண் நம்பரை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதற்கு உரிய முகவரியை செல்போன் நிறுவனத்தின் உதவியுடன் தேடினர். அப்போது அந்த செல்போனுக்குரிய நபர் சென்னை திருவேற்காட்டை சேர்ந்த வாலிபர் நாகராஜ் என்பவர் என தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள நாகராஜை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே நாகராஜ் ரெயில்வே காவல்துறையினரின் செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment