பக்கங்கள்

Sunday, June 23, 2013

ஸ்நோடன் மீது அமெரிக்கா திருட்டு வழக்கு!

வாஷிங்டன்:அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏவின் முன்னாள் பணியாளர் எட்வர்ட் ஸ்நோடன் (29) மீது அரசு உடமைகளைக் திருடியது, அரசை உளவு பார்த்ததுஉள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளை அமெரிக்க அரசு பதிவு செய்துள்ளது.
அமெரிக்க உளவு அமைப்புகள் சொந்த நாட்டு மக்களின் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வது, கூகுள், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களில்இருந்து வெளிநாட்டு நபர்கள் பரிமாறிக் கொள்ளும் தகவல்களை ரகசியமாக
பதிவு செய்வது உள்ளிட்ட வேலைகளை ஸ்நோடன் அம்பலப்படுத்தினார். இதையடுத்து அவர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹாங்காங்கில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஸ்நோடன் இந்த நிகழ்வுகளை அடுத்து பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இப்போது அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்த விவரங்கள் தெரியவரவில்லை. எனினும் அவரைக் கைது செய்ய வேண்டுமென்று ஹாங்காங்கிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஸ்நோடன் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டால், இப்போது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.
முன்னதாக அமெரிக்க உளவு அமைப்புகளின் ரகசிய வேலைகள் குறித்து ஸ்நோடன் வெளியிட்ட தகவல்கள் பிரிட்டனின் தி கார்டியன் பத்திரிகையிலும், பின்னர் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையிலும் வெளியானது. அமெரிக்காவின் இந்த உளவு வேலைக்கு உள்நாட்டிலேயே எதிர்ப்பு கிளம்பியது.
எனினும் தனது அரசின் உளவுப் பணிகள் சரியானதுதான் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா நியாயப்படுத்திப் பேசினார். இதுபோன்ற ரகசிய வேலைகளால்தான் பல்வேறுபயங்கரவாத நடவடிக்கைகள் முன்கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டு முறியடிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளும் இந்த ரகசியப் பணிகளால் பயனடைந்துள்ளன என்று விளக்கமளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment