பக்கங்கள்

Sunday, June 23, 2013

அல்லாஹ் அக்பர் என்று கூறிய யூதரை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம்!

டெல் அவீவ்:ஜெருசலத்தில் யூதர்கள் புனிதமாக கருதும் மேற்கு சுவருக்கு அருகே(சோக சுவர்) ”அல்லாஹு அக்பர்” என்று உரக்க கூறிய யூத மதத்தைச்  சார்ந்த நபரை இஸ்ரேலிய பாதுகாப்புப் படை சுட்டுக்கொலைச் செய்துள்ளது. ஃபலஸ்தீன் போராளி என்று தவறாக புரிந்து இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொலைச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.மாஜிஸ்ட்ரேட் முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட பதுகாப்புப் படை வீரரை போலீஸ் கஸ்டடியில் கேட்டுள்ளது.

குளியலறையில் அருகில் இருந்து இஸ்ரேல் யூதர் ”அல்லாஹு அக்பர்” என்று உரக்க கூறியுள்ளார். இதைக்கேட்டவுடன் அருகில் இருந்து பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியை எடுத்து யூதரை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். இதில் அவர் சில நிமிடங்களில் உயிரிழந்ததாக போலீஸ் கூறுகிறது. கொல்லப்பட்ட நபர், “அல்லாஹு அக்பர்” என்று உரக்க கூறிய யூதர், தனது பாக்கெட்டில் இருந்து எதனையோ எடுக்க முயன்றபோது சுட்டுக்கொன்றதாக இஸ்ரேலி பாதுகாப்பு படை வீரர் கூறியுள்ளார். ஆனால், கொல்லப்பட்ட நபருடைய உடலில் இருந்து சந்தேகத்திற்குரிய எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை. எச்சரிக்கை விடுக்கவோ, கைதுச் செய்யவோ முயலாமல், 10க்கும் மேற்பட்ட தோட்டாக்களை யூதர் மீது சுட்டுள்ளார் வெறிப்பிடித்த இஸ்ரேலிய பாதுகாப்பு படை வீரர். இத்தகவலை போலீஸ் கூறியுள்ளது.

No comments:

Post a Comment