பக்கங்கள்

Monday, January 14, 2013

துலே கலவரம்:பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்காவிட்டால் ராஜினாமா!துணை மேயர்!


துலே:மஹராஷ்ட்ரா மாநிலம் துலேயில் கடந்த வாரம் நிகழ்ந்த வகுப்பு வாத கலவரத்தில் பலியானவர்கள், மற்றும் சொத்துக்களை இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காவிட்டால் பதவியை ராஜினாமாச் செய்வேன் என்று துணை மேயர் ஹாஜி ஷவ்வால் கூறியுள்ளார்.கலவரம் குறித்து உயர்மட்டக் குழு விசாரணை நடத்தவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாநகராட்சியின் 14 முஸ்லிம் உறுப்பினர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ராஜினாமாச் செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.துணை மேயர் உள்ளிட்ட 10 முஸ்லிம் உறுப்பினர்கள் என்.சி.பி கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் சுயேட்சை உறுப்பினர்கள் ஆவர்.2 பேர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள்.3 பேர் என்.சி.பி கட்சியின் உறுப்பினர்கள் ஆவர்.நிரபராதிகள் கொல்லப்பட்டு பலருக்கு காயம் ஏற்பட்ட பிறகும் அரசு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை என்று ஷவ்வால் குற்றம் சாட்டினார்.கலவரத்தின் போது போலீஸின் அநியாய துப்பாக்கிச்சூட்டில் தனது பலியானதை கண்டித்து தான் வேலைக்கு செல்ல மாட்டேன் என்று துலே துணை தாசில்தார் அப்துல் ஹலீம் அன்ஸாரி கடந்த வாரம் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.வீட்டிற்கு காய்கறி வாங்க மார்க்கெட்டிற்கு சென்ற அப்துல் ஹலீமின் மகனை போலீஸ் அநியாயமாக சுட்டுக் கொன்றது.துலேயில் கடந்த வாரம் நடந்த கலவரத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட அனைவரும் போலீஸின் துப்பாக்கிச்சூட்டில்தான் பலியாகியுள்ளனர் என்பது போஸ்ட் மார்ட்டம் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்த பகுதியில் நிலைமை கட்டுக்குள் வந்தபோதிலும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது.இரு பிரிவைச் சார்ந்த சமூக விரோதிகள் கலவரத்தை ஏற்படுத்தியபோது அவர்களை கட்டுப்படுத்தாத போலீஸ் முஸ்லிம்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சமூக ஆர்வலர் இர்ஃபான் என்சினீயர் கூறுகிறார்.இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு சி.ஐ.டியிடம் அரசு வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment