பக்கங்கள்

Saturday, January 26, 2013

தீவிரவாதத்தின் ஆணிவேர் திருக்குர்ஆன் – அமெரிக்க அடிமை கமலின் விஸ்வரூபம்!



சென்னை:முற்போக்கு பிராமணன் கமல் ஹாசன் இயக்கி தயாரித்துள்ள ‘விஸ்வரூபம்’ திரைப்படம் இஸ்லாத்தின் அடிப்படையான திருக்குர்ஆனை தீவிரவாதத்தின் ஆணிவேராக சித்தரிக்கிறது. தமிழகத்தின் முஸ்லிம் அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து வெளியீட்டு தேதிக்கு தடை விதித்துள்ளது தமிழக அரசு. இந்நிலையில் இதனை எதிர்த்து கமலஹாசன் தொடர்ந்த வழக்கின் விசாரணையை வருகிற 28-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
திரைப்படத்தின் ட்ரெயிலர் மற்றும் அதன் உள்ளடக்கத்தை குறித்து கவலை அடைந்த முஸ்லிம் அமைப்புகள் திரைப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான கமலஹாசனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பாப்புலர் ஃப்ரண்ட், எஸ்.டி.பி.ஐ, த.மு.மு.க, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட அமைப்புகளைச் சார்ந்தோர் இதில் இடம்பெற்றிருந்தனர்.
கமலஹாசன் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளை சமாதானப்படுத்தி தனது சூழ்ச்சியை நிறைவேற்றிட கருதினார். ஒரு குறிப்பிட்ட  முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதியும் கமலஹாசனுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் முஸ்லிம் அமைப்பினர் படத்தின் ப்ரிவியூ காட்சியை போட்டுக் காட்டுமாறு கமலஹாசனுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 21-01-2012 அன்று திரைப்படத்தின் ப்ரீவியூ காட்சி போட்டு முஸ்லிம் தலைவர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது. அப்பொழுதுதான் இந்தியாவிலேயே இதற்கு முன் இல்லாத அளவுக்கு முழுக்க முழுக்க முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாத்தின் மீது அவதூறை அள்ளிவீசும் திரைப்படம் தான் விஸ்வரூபம் என்பதை முஸ்லிம் தலைவர்கள் புரிந்துகொண்டனர். துவக்கம் முதலே பேச்சுவார்த்தையில் திரைப்படத்தின் எந்தவொரு பகுதியையும் நீக்கமுடியாது என்று கமலஹாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து பேட்டியளித்த பாப்புலர் ஃப்ர்ண்ட மாநில செயற்குழு உறுப்பினர் கூறுகையில்,’அமெரிக்கா ஸ்பான்சர் செய்த திரைப்படம் தான் விஸ்வரூபம்.திருக்குர்ஆன்  தான் தீவிரவாதத்திற்கு மூல காரணம் என்ற செய்தியை இத்திரைப்படம் கூறுகிறது.இதில் உள்ள முஸ்லிம் கதாப்பாத்திரங்கள் ஒவ்வொரு தாக்குதல்களின் போதும் திருக்குர்ஆன் வசனங்களைக் கூறிக்கொண்டோ, கூறிய பிறகோ ஈடுபடுகின்றனர்’ என்று அவர் தெரிவித்தார்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் அப்துல் சத்தார் கூறுகையில்,’குழந்தைகள் முதல் முதியவர் வரை சமுதாயத்தின் அனைத்து தரப்பினரையும் தீவிரவாதிகளாக கமலின் படம் சித்தரிக்கிறது. அத்துடன் தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் அமெரிக்கா நடத்தும் அட்டூழியங்களை இத்திரைப்படம் நியாயப்படுத்துகிறது’ என்று கூறினார்.
இத்திரைப்படம் குறித்து தங்களது எதிர்ப்புகளை சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் தமிழக உள்துறை செயலாளர் ஆகியோரிடம் முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் கூறுகையில்,’இனரீதியான, மதரீதியான உணர்வுகளை காயப்படுத்தும் வார்த்தைகளோ, காட்சிகளோ திரைப்படத்தில் இடம்பெறக்கூடாது என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தணிக்கைக் குழுவிற்கு அளித்துள்ள நெறிமுறை வழிகாட்டுதல்களில் கூறியுள்ளது.ஆனால், ‘விஸ்வரூபம்’ திரைப்பட விவகாரத்தில் இது மீறப்பட்டுள்ளது என்று இஸ்மாயீல் கூறினார்.
மனிதநேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் கூறுகையில், ”கமலஹாசனின் இத்தகைய நிலைபாடுகள் திரைப்படங்களில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் அவர் ஒரு நடிகர் என்பதை நிரூபிக்கின்றன.தாலிபான் தலைவர் முல்லா உமர் மதுரை மற்றும் கோவையில் தலைமறைவாக இருந்தார் போன்ற பொய்களை இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர்.’ என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment