பக்கங்கள்

Wednesday, May 2, 2012

19-வது அரேபியன் டிராவல் மார்க்கெட் துபாயில் துவங்கியது!


Mohammed opens Arabian Travel Market Exhibition 2012
துபாய்:19-வது அரேபியன் டிராவல் மார்க்கெட்(ATM) துபாய் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் துவங்கியது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை தலைவரும், பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். துவக்க நிகழ்ச்சிக்கு பின்னர் ஷேக் முஹம்மது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பவிலியன்களை சுற்றிப் பார்த்தார்.
யு.ஏ.இ மற்றும் வெளிநாடுகளைச் சார்ந்த பிரமுகர்கள் துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நான்கு தினங்கள் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மேற்காசியாவின் மிகப்பெரிய டிராவல் அண்ட் டூரிஸம் திருவிழாவான ஏ.டி.எம்மில் இவ்வருடம் கண்காட்சியாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என நம்புவதாக இந்நிகழ்ச்சியின் முக்கிய அமைப்பாளரான ரீட் ட்ராவல் எக்ஸ்பிஷன் கூறுகிறது.
சர்வதேச அளவில் டிராவல் அண்ட் டூரிஸம் துறையில் முதலீடுகள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக ரீட் ட்ராவல் எக்ஸ்பிஸன்ஸின் போர்ட்ஃபோலியோ இயக்குநர் மார்க் வால்ஸ்த் தெரிவித்தார்.
பிராந்தியத்தில் கடந்த ஆண்டு 3,800 கோடி அமெரிக்க டாலர் முதலீடு வந்துள்ளது. இது இம்முறை 4,100 கோடி டாலராக உயரும் என கருதப்படுகிறது. சுற்றுலா துறையில் சவூதிஅரேபியா, ஒமன், கத்தர், யு.ஏ.இ ஆகிய நாடுகளில் இக்கால அளவில் மிகப்பெரிய வளர்ச்சிக்கு வாய்ப்புள்ளது.
2012-ஆம் ஆண்டில் யு.ஏ.இயில் வருகை தந்தவர்களின் எண்ணிக்கையில் ஒன்பது சதவீதம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டும் ஹோட்டல்களுக்கு வருகை தந்த வெளிநாட்டினரில் பத்து சதவீதம் அதிகரித்துள்ளது என்று துபாய் டூரிஸம் அண்ட் காமர்ஸ் மார்க்கெட்டிங்(டி.டி.சி.எம்)கின் புள்ளிவிபரம் கூறுகிறது. இந்நிகழ்ச்சி மே மாதம் 3-ஆம் தேதி நிறைவுறும்.

No comments:

Post a Comment