
சென்னை:சேது சமுத்திர திட்டத்தை சீர்குலைக்க ராமர் பெயரை பயன்படுத்தி அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறார்கள் என்று தி.மு.க தலைவர் மு.கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேது சமுத்திர திட்டம் தொடர்பாக சென்னையில் நேற்று(வியாழக்கிழமை) கருணாநிதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியது:
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மீது அக்கறையுள்ளவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எடுக்கக்கூடிய முடிவு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதாகத்தான் இருக்க முடியும்.
சிலரின் ஆசைக்கு வேண்டுமானால் அது தேசியச் சின்னமாக இருக்கலாம்.
எனினும், சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டு, அதற்குப் பிறகு சேது பாலத்தை தேசியச் சின்னம் என்று அறிவித்தால் என்ன ஆகிவிடும்?
சேது சமுத்திர திட்டத்தை உருக்குலைப்பதற்கு ராமர் பெயரைப் பயன்படுத்தி அவருக்கும் கெட்ட பெயரை உண்டாக்குகின்றனர்.
அதற்கு மத்திய அரசு துணை போகாமல் இருந்து இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஏற்கெனவே அந்தத் திட்டம் நிறைவேற்றப்படலாம் என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment