பக்கங்கள்

Friday, April 27, 2012

அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு போதிக்கப்படும் இஸ்லாத்திற்கு எதிரான போர்!


US military taught anti-Islam courses
வாஷிங்டன்:அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி பாடங்களில் ’நாம் இஸ்லாத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளோம்’ என்பதை போதிக்கும் பாடப்பிடிவு இடம் பெற்றுள்ளது.
நோர்ஃபோக்கில் லெஃப்டினண்ட் கர்னல்களுக்கான ஜோயிண்ட் ஃபோர்ஸஸ் ஸ்டாஃப் கல்லூரியில் இத்தகையதொரு பாடம் கற்பிக்கப்படுகிறது. இச்சம்பவம் சர்ச்சையை கிளப்பியதைத் தொடர்ந்து இப்பாடப் பிரிவை நீக்கிவிட்டதாக பெண்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
பாடத்திட்டத்தில் இத்தகைய விமர்சனங்கள் எவ்வாறு இடம் பெற்றது? என்பது குறித்து விசாரணை நடத்த பெண்டகன் உத்தரவிட்டுள்ளது. ’நாங்கள் இஸ்லாத்திற்கு எதிராக அல்ல, மாறாக தீவிரவாதத்திற்கு எதிராக போர் நடத்துகிறோம்(?)’ என்று கிர்பி மழுப்பலான பதிலை அளித்துள்ளார்.
அனைத்துப் பாடங்களையும் பரிசோதிக்கவும், இஸ்லாத்திற்கு விரோதமான கருத்துக்களை நீக்கவும் நோர்ஃபோக் கல்லூரி சேர்மன் மார்டின் டெம்ப்ஸி உத்தரவிட்டுள்ளார். இஸ்லாமிக் ரேடிக்கலிசம் என்ற பாடத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
2004-ஆம் ஆண்டு துவங்கிய இந்த பாடத்திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் படித்துவிட்டு வெளிவருகின்றனர். 2011-ஆம் ஆண்டு இப்பாடத்திட்டம் மீளாய்வு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment