
போபால்:மத்தியபிரதேச மாநிலம் மொரீனா மாவட்டத்தில் இளம் வயது ஐ.பி.எஸ் அதிகாரி நரேந்திரகுமாரை சட்டவிரோத சுரங்க தொழில் மாஃபியா கும்பல் கொலைச் செய்த வழக்கை மத்தியபிரதேச மாநில பா.ஜ.க அரசு சி.பி.ஐ விசாரணைக்கு அனுமதி வழங்கியுள்ளது என்று முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
வழக்கில் சி.பி.ஐ விசாரணை கோரி எதிர் கட்சியான காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சட்டப்பேரவை நிறுத்தி வைத்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் சி.பி.ஐ விசாரணையை அறிவித்தார். சம்பவத்தைக் குறித்து நரேந்திரகுமார் சிங்கின் மனைவி மதுராணி கோரிக்கை விடுத்ததன் பேரில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடுவதாக சிவராஜ்சிங் சவுகான் அறிவித்தார்.
முன்னர் சட்டப்பேரவை கூடிய உடனே காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். கொலையை குறித்து விவாதிக்க வேண்டும் என கோரி எதிர்கட்சியினர் அவசர தீர்மானத்திற்கு நோட்டீஸ் அளித்தனர். பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருப்பதாக அறிவித்தது. காங்கிரஸ் உறுப்பினர்கள் சி.பி.ஐ விசாரணை கோரி அவையின் நடுப்பகுதிக்கு சென்றனர். அமளி நீடித்ததால் சபாநாயகர் அவையை ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment