
இந்தூர்:தகவல் அறியும் உரிமை ஆர்வலர் ஷஹ்லா மஸூதின் கொலை வழக்கு தொடர்பாக கைதானா ஸபா ஃபாரூக்கியை சிறப்பு நீதிமன்றம் மார்ச் மாதம் 6-ஆம் தேதி வரை சி.பி.ஐ காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ளது. சிறப்பு சி.பி.ஐ நீதிபதி சுப்ராசிங் ஸபாவை 3 நாட்கள் சி.பி.ஐ காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
ஷஹ்லா மஸூதி கொலையில் முக்கிய குற்றவாளியாக சி.பி.ஐ கூறும் ஷாஹிதா பர்வேஸின் நெருங்கிய நண்பரான ஸபாவை கடந்த வெள்ளிக்கிழமை போபாலில் வைத்து சி.பி.ஐ கைது செய்தது. பா.ஜ.க எம்.எல்.ஏவுடன் ஷாகிதாவின் தொடர்பும், ஷஹ்லா மீதான பகைமையும் ஸபாவுக்கு தெரியும் என்று சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இவ்வழக்கு தொடர்பாக பா.ஜ.க எம்.எல்.ஏ த்ரூவ நாராயண சிங்கிடமும், அவரது நெருங்கிய கூட்டாளி சஞ்சய் குப்தாவிடமும் சி.பி.ஐ விசாரணை நடத்தியது.
No comments:
Post a Comment