பக்கங்கள்

Sunday, February 26, 2012

கேம்ப்ரிட்ஜ்:போதைப் பொருளை விற்று கல்லூரி கட்டணம் செலுத்தும் மாணவர்கள்!


imagesCAW2L0BF
லண்டன்:உலகிலேயே பிரசித்திப்பெற்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஏழு மாணவர்களில் ஒருவர் போதைப் பொருளை விற்பனைச் செய்து கல்லூரி கட்டணத்தை செலுத்துவதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
கேம்ப்ரிட்ஜ் மேம்பஸில் வால்சிட்டி பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. கேம்ப்ரிட்ஜ் மாணவர்கள் போதைப் பொருட்களை விற்பனைச் செய்வதுடன், பிற மாணவர்களையும் போதைப் பொருளை உபயோகிக்க தூண்டுவதாக அறிக்கை கூறுகிறது.
மேலும் அந்த அறிக்கை கூறுவது:
பல மாணவர்களும், படிப்பு செலவுக்கு வேறு வழிகள் இல்லாத சூழல் ஏற்பட்ட நிலையில் போதைப்பொருள் விற்கும் முடிவை எடுத்துள்ளனர். சந்தையில் போதைப் பொருள் பயனீட்டாளர்களும் மாணவர்களே. ஒரு மாணவனிடமிருந்து 9000 பவுண்ட் கட்டணமாக பல்கலை கழகம் வசூலிக்கிறது. கஞ்சாவும், கொக்கைனும் பல்கலைக்கழக வளாகத்தில் அதிக டிமாண்ட் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கேம்ப்ரிட்ஜிலும், இதர பல்கலைகழக வளாகங்களிலும் போதைப்பொருள் அதிகரித்துள்ளது. 14 சதவீதம் பேர் தடைச் செய்யப்பட்ட போதைப் பொருளை உபயோகித்து மருத்துவ சிகிட்சையை பெற்றுள்ளனர்.
சிரமமான பணி என்றாலும், வேகமாகவும், எளிதாகவும் கட்டணத்தை அடைப்பதற்கான வழி என்று லண்டனில்  கிங் கல்லூரி மாணவர் கூறுகிறார். கேம்ப்ரிட்ஜில் 434 மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனையில் தொடர்பிருப்பதாக அந்த மாணவர் கூறுகிறார். இவர்கள் அனைவரும் பட்டதாரி மாணவர்கள். பணியின் சுமையும், மன அழுத்தமும் குறைப்பதற்கு போதைப்பொருள் உதவுவதாக மாணவர்கள் கூறுகிறார்கள்.
மிகவும் அழுத்தமான சூழல் கேம்பஸில் நிலவுவதாகவும் அதிலிருந்து ஆறுதல் கிடைப்பதற்காக போதைப்பொருளை உபயோகிப்பதாகவும் இன்னொரு மாணவர் கூறுகிறார். 60 சதவீத பட்டதாரி மாணவர்களும் போதைப்பொருள் சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்று சர்வே கூறுகிறது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை பின்னுக்கு தள்ளி கடந்த ஆண்டு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் உலகில் முதல் பல்கலைகழகமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment