பக்கங்கள்

Sunday, February 26, 2012

மோசடி:எடியூரப்பா மீது மேலும் ஒரு வழக்கு!


yeddyurappa
பெங்களூர்:நில ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பாக முன்னாள் கர்நாடகா முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா மீது லோக் ஆயுக்தா போலீஸ் வழக்கு பதிவுச் செய்துள்ளது.
கர்நாடகா வீட்டு வசதி வாரியத்தின்(கே.ஹெச்.பி) நிலத்தை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு தொடர்பான புகாரில் வழக்கு பதிவுச் செய்துள்ளதாக லோக் ஆயுக்தா போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
420 (மோசடி செய்தல்) 120 பி (குற்றச்சதி) மற்றும் 13 (1) (டி) பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவுச் செய்யப்பட்டுள்ளது. எடியூரப்பா, அவரின் மகள் எஸ்.அருணாதேவி, எடியூரப்பாவின் நான்கு உதவியாளர்கள், இரண்டு கர்நாடகா ஹவுஸிங் போர்ட் அதிகாரிகள் ஆகியோர் மீது குற்றம் சாட்டி சமர்ப்பித்த மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மகாலெட்சுமி நெராலே இம்மாதம் 21-ஆம் தேதி ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவுச்செய்ய நீதிபதி போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
முதல்வர் பதவிக்காக எடியூரப்பா கடுமையாக முயற்சி செய்யும் வேளையில் மேலும் ஒரு மோசடி வழக்கு எடியூரப்பா மீது பாய்ந்துள்ளது.

No comments:

Post a Comment