பக்கங்கள்

Monday, February 13, 2012

ஆஷிஃப் ஹுஸைன்:வீட்டுக்குள் நுழைய மெஹ்பூபா முஃப்திக்கு தடைவிதித்த பொதுமக்கள்


மெஹ்பூபா முஃப்தி
ஸ்ரீநகர்:வெள்ளிக்கிழமை ராணுவத்தினரால் அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்ட ஆஷிக் ஹுஸைன் என்ற இளைஞரின் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்ற பி.டி.பி கட்சி தலைவர் மெஹ்பூபா முஃப்தி உள்ளிட்ட தலைவர்களை ஊர் மக்கள் தடுத்து நிறுத்தினர். எந்த அரசியல்வாதிகளையும் வீட்டிற்குள் நுழையவிட மாட்டோம் என அவர்கள் கண்டிப்பாக தெரிவித்தனர்.
தலைவர்களின் வருகையை தடைச் செய்யாதீர்கள் என ஹுஸைனின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்த பிறகும், கோபமடைந்த இளைஞர்கள் சிலர் மெஹ்பூபாவையும் இதர பி.டி.பி தலைவர்களையும் தடுத்ததாக பி.டி.பி கட்சியின் பத்திரிகை அறிக்கை கூறுகிறது. இளைஞரின் கொலையை குறித்து ஜம்மு-கஷ்மீர் மாநில அரசும், ராணுவமும் தனி தனியாக விசாரணை நடத்திவருகிறது.

No comments:

Post a Comment