
ஸன்ஆ:ஒரு வருடமாக தொடரும் அரசு எதிர்ப்பு போராட்டத்தின் இறுதியில் யெமன் அதிபராக அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவி விலகினார். அப்துற்றப் மன்சூர் ஹாதி புதிய அதிபராக பதவியேற்றுள்ளார்.
அதிபர் பதவிக்கான மக்கள் விருப்ப வாக்கெடுப்பில் 60 சதவீத வாக்குகள் பெற்ற அப்துற்றப் அதிபராக தேர்வு செய்யப்பட்டதுடன், 33 வருடங்கள் நீண்ட ஸாலிஹின் ஏகாதிபத்திய யுகம் முடிவுக்கு வந்துள்ளது. இம்மாதம் 21-ஆம் தேதி நடந்த தேர்தலில் ஹாதி மட்டுமே தேர்தலில் போட்டியிட்டார். முந்தைய ஸாலிஹ் அரசில் ஹாதி துணை அதிபராக பதவி வகித்தவர்.
அரசு எதிர்ப்பு மக்கள் போராட்டங்களின் இறுதியில் அரபுலகில் பதவி விலகும் நான்காவது அதிபர் அப்துல்லாஹ் ஸாலிஹ் ஆவார்.
No comments:
Post a Comment