பக்கங்கள்

Sunday, February 26, 2012

அப்துல் நாஸர் மஃதனியின் மனு தள்ளுபடி!


அப்துல் நாஸர் மஃதனியின்
பெங்களூர்:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடிச் செய்துள்ளது. பெங்களூரில் கூடுதல் மெட்ரோபாலிடன் நீதிமன்றம் இம்மனுவை தள்ளுபடிச் செய்தது.
இவ்வழக்கில் அப்துல் நாஸர் மஃதனி விசாரணையை சந்திக்கவேண்டும் என்றும், இம்மாதம்27-ஆம் தேதி வழக்கில் குற்றப்பத்திரிகையை மஃதனிக்கு வாசித்து காட்டவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்துல் நாஸர் மஃதனி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்பு, அவர் அளித்த ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது.

No comments:

Post a Comment