
புதுடெல்லி:இதர
பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத ஒதுக்கீட்டிலிருந்து,
சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு
எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணைக்கு
ஏற்றுக்கொள்ள,உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
கல்வி நிறுவனங்களில் இதர
பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்கப்படும் என,
கடந்தாண்டு டிசம்பரில் மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, விக்ரம்
யாதவ் என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில், “இதர
பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டில் இருந்து,
சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் முடிவு, சட்ட
விரோதமானது, பாராபட்சமானதும் கூட. சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும்
நோக்கத்துடன், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசின் முடிவை
ரத்து செய்ய வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நீதிபதிகள் எச்.எல்.டாட்டூ, சி.கே.பிரசாத்
ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது,
“இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்கமுடியாது. மத்திய அரசின் முடிவை எதிர்த்து,
ஐகோர்ட்டில் முறையீடு செய்யலாம்’ என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment