பக்கங்கள்

Monday, February 13, 2012

மன அழுத்தம் தரும் கல்வி முறையை மாற்றவேண்டும் – உச்சநீதிமன்ற நீதிபதி


Justice Altamas Kabir
ஹைதராபாத்:தற்போது நடைமுறையில் உள்ள கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதியும், தேசிய சட்ட சேவை ஆணையத்தின் தலைவருமான அல்டமஸ் கபீர்கூறியுள்ளார்.
ஹைதராபாதில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் உரைநிகழ்த்திய அவர் கூறியது:
சென்னையில் பள்ளி ஆசிரியையை 15 வயது மாணவர் குத்திக் கொன்றுள்ளார். இதுபோன்ற செயலில் அந்த மாணவர் ஈடுபடுவதற்கு காரணம் என்ன? இப்போதுள்ள கல்வி முறையால், குழந்தைகள் மன அழுத்தத்துக்கு ஆளாவது அதிகரித்துள்ளது. கல்விக் கொள்கையை மாற்ற நடவடிக்கை எடுக்க இதுவே சரியான தருணமாகும்.
குழந்தைகள் பாதுகாப்புக்காக பல சட்ட திட்டங்கள் அமலில் உள்ள போதும், அவர்களின் மீது தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
நாட்டின் மக்கள் தொகையில் 42 சதவீதம் பேர் குழந்தைகள். அதில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. குழந்தைகளின் பிரச்னைகள் குறித்து ஆராய்ந்து தீர்வுகாண சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அல்டமஸ் கபீர்.

No comments:

Post a Comment