டெஹ்ரான்:ஃபலஸ்தீனை ஆக்கிரமித்து கொடூரமான தாக்குதல்களை கட்டவிழ்த்துவிடும் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தை தொடரவேண்டும் என ஈரானின் உயர் ஆன்மீக தலைவர் ஆயத்துல்லாஹ் காம்னஈ ஹமாஸிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஹமாஸ் தலைவர்களில் ஒருவரும், காஸ்ஸா பிரதமருமான இஸ்மாயீல் ஹானிய்யாவின் ஈரான் சுற்றுப்பயணத்தின் போது காம்னஈ இதனை தெரிவித்துள்ளார்.
போராட்ட களத்தில் இருந்து பின்வாங்கியதால் மறைந்த பி.எல்.ஒ தலைவர் யாஸிர் அரஃபாத் மக்கள் ஆதரவை இழந்தார் என காம்னஈ ஹானிய்யாவிற்கு நினைவூட்டினார்.
இதற்கு பதிலளித்த ஹானிய்யா, “அனைத்து ஃபலஸ்தீன் மக்களின் விடுதலையும், ஒருதலைபட்சமான சமாதான பேச்சுவார்த்தைகளை நிராகரிப்பதும் ஹமாஸின் மாற்றமில்லாத லட்சியம்” என தெரிவித்தார்.
No comments:
Post a Comment