
ஸன்ஆ:துணை அதிபர் அப்துற்றப் மன்சூர் ஹாதியை அதிபராக தேர்வு செய்ய நடைபெற்ற வாக்குப்பதிவில் 60 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தேர்தலை புறக்கணிக்க சில அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. யெமனின் சட்டத்தின் படி வாக்குப்பதிவு முடிவை அறிவிப்பதை 10 நாட்கள் வரை நீட்டிக்கலாம்.
ஏகாதிபத்திய வாதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு எதிராக யெமனில் நடந்த போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து வளைகுடா நாடுகள் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவி விலகும் அமைதி திட்டத்தை முன்வைத்தன. இதன் அடிப்படையில் தற்போதைய துணை அதிபரை அதிபராக பதவியேற்க செய்து இரண்டு வருடத்திற்குள் தேர்தல் நடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. தேர்தலின் போது நடந்த தாக்குதல்களில் 10 பேர் கொல்லப்பட்டனர். போராளிகளின் செல்வாக்கு மிகுந்த பகுதிகளில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது.
No comments:
Post a Comment