பக்கங்கள்

Saturday, October 24, 2015

அரியானாவில் மற்றொரு சம்பவம் புறா திருடியதாக தலித் சிறுவன் அடித்து கொலை

அரியானா மாநிலம் பரிதாபாத்தில் 2 தலித் சிறுவர் - சிறுமி உயி ரோடு எரித்துக் கொல் லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரவில் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த அவர்கள் மீது உயர் சாதியினர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து ஈவு இரக்கம் இல்லாமல் கொலை செய்தனர். இது பற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்த் பரபரப்பு அடங்கு முன்பே அதே மாநிலத்தில் ஒரு தலித் சிறுவன் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை அதிகரிக்க செய்துள் ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

அரியானா மாநிலம் கோகனா பகுதியைச் சேர்ந்தவன் கோவிந்த். இவன் வீடு புகுந்து புறா திருடியதாக அந்த கிராமத்தைச் சேர்ந்த வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் போலீசில் புகார் செய்தனர்.



போலீசார் கோவிந்தனை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவனை போலீசார் கடுமையாக அடித்து உதைத்தனர். அப் போது அங்கு வந்த கோவிந் தின் தாயார், தன் மகனை விட்டு விடும்படி கெஞ்சினார்.

அதற்கு போலீசார் ரூ.10 ஆயிரம் தந்தால் விட்டு விடுவ தாக கூறினார்கள். உடனே கோவிந்தின் தாய் வெளியில் சென்று ரூ.10 ஆயிரம் வாங்கி வந்தார். ஆனால் போலீஸ் நிலையத்தில் கோவிந்த் இல்லை. அவன் தப்பி ஓடி விட்டதாக போலீசார் கூறி னார்கள்.

இரவு முழுவதும் தேடியும் கோவிந்த் எங்கு சென்றான் என்பது மர்மமாக இருந்தது. இந்த நிலையில் மறுநாள் காலை கோவிந்த் தன் வீட்டுக்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் பிண மாக கிடந்தான். அவன் உடல் முழுவதும் காயங்கள் இருந்தன.

2 கால்களும் உடைக்கப் பட்டிருந்தன. கோவிந்த் உடலை மீட்ட அவன் உறவினர்கள் தேசிய நெடுஞ்சாலையில் உடலை வைத்து போராட்டம் நடத்தினார்கள். போலீசார் பணத்தையும் வாங்கிக் கொண்டு கோவிந் தனை அடித்துக் கொன்று விட்டதாக குற்றஞ்சாட்டி னார்கள்.இது தொடர்பாக தனி விசாரணை நடத்த அரி யானா மாநில அரசு உத்தர விட்டுள்ளது.

No comments:

Post a Comment