பக்கங்கள்

Sunday, August 30, 2015

குஜராத் கலவரத்தை பற்றி அப்துல் கலாம் அவர்கள் கூறியது-நான் அங்கு சென்று வருவதை விரும்பாத அவர்கள் எதற்க்கோ பயப்படுகின்றனர் என்பதை உணர்ந்தேன்



நான் அங்கு சென்று வருவதை விரும்பாத அவர்கள் எதற்க்கோ பயப்படுகின்றனர் என்பதை உணர்ந்தேன்.
குஜராத் கலவரத்தை பற்றி அப்துல் கலாம் அவர்கள் கூறியது...
அகிம்சையால் உலகப் புகழ் பெற்ற காந்தி பிறந்த மண்ணில் விழுந்த இரத்த கரையை துடைக்க வேண்டிய பொறுப்பு எனக்கும் உள்ளது என்பதை உணர்ந்து நான் குஜராத் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தேன். நான் கலவரப் பிரதேசங்களுக்கு செல்ல போகிறேன் என்பதை அறிந்து அன்றைய மத்திய மந்திரிகள் பலரும், பிரதமர் வாஜ்பாயும் கூட அதிருப்தி அடைந்தனர்.
நான் அங்கு சென்று வருவதை விரும்பாத அவர்கள் எதற்க்கோ பயப்படுகின்றனர் என்பதை உணர்ந்தேன்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நிலைப்பாடுகள் சரியா? தவறா? ஆராய்வதற்க்கு அப்பால் கலவரத்தால் ஏற்ப்பட்ட காயத்தை மருந்து தடவி ஆற்ற முடியுமா என்று தான் நான் முயற்ச்சித்தேன்.
இதையெல்லாம் A Journey Through challenges என்ற நூலில் விரிவாக பதிவு செய்து உள்ளேன்.
காந்திநகர் விமான நிலையம் வந்தடைந்த என்னை நரந்திர மோடியும் அதிகாரிகள் குழுவும் வரவேற்றனர். முக்கியமாக மூன்று முகாம்களையும், பிற கலவரப் பகுதிகளையும் நான் சென்று பார்த்த போது உள்ளபடியே மனம் உடைந்து போனேன். இந்தியாவின் கதியற்ற நிலையை நினைத்து நான் விசும்பினேன்.
கலவரத்திற்க்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் மோடிக்கு உத்தரவு பிற்ப பித்தேன்.
அகமதாபாத் நகருக்கு சென்றிருந்த போது, அங்குள்ள முகாமிலுள்ள ஆறு வயது சிறுவன் என்னிடம் வந்து, "ராஷ்டிரபதி ஜி! என் உம்மாவையும், வாப்பாவையும் எனக்கு திருப்பி தாருங்கள்" என்று கெஞ்சிய போது, எனது கண்கள் குளமானது. எதுவும் தெரியாத அந்த அப்பாவி பிஞ்சுக்கு நான் ெ ன்ன சொல்லி அமைதிப்படுத்துவது என்று நான் ஒரு கணம் திகைத்தேன்.
இது மனச்சாட்சி உள்ள எந்த இந்திய குடிமகனாலும் நியாயப்படுத்தவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியாது.
- நன்றி: சமநிலை சமுதாயம்

No comments:

Post a Comment