Monday, June 1, 2015

ஒரே இடத்தில் அடைத்து வைத்தனர் . அடைப்பட்ட கைதிகள் ஒன்றிணைந்து உருவாக்கி அமைப்பு தான் ஐ எஸ் தீவிரவாத அமைப்பு - தட்ஸ் தமிழ் செய்தி..

ஈராக் சிறையில் அடைக்கப்பட்டவர்களின் பாதுகாவலர்(அமெரிக்கர்)கள் ஆண்களுக்கான மேக்சிம் ஆபாச பத்திரிக்கையை அளித்து அதை பார்க்குமாறு கூறியுள்ளனர். அதை பார்க்க மறுத்தவர்களை பயங்கரவாதிகள் என கருதி அவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் அடைத்து வைத்தனர் . அடைப்பட்ட கைதிகள் ஒன்றிணைந்து உருவாக்கி அமைப்பு தான் ஐ எஸ் தீவிரவாத அமைப்பு - தட்ஸ் தமிழ் செய்தி..
எல்லாம் சரி தான் ஆசிரியரே . ஆபாசத்தை பார்க்க மறுத்ததால் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள் என்கிறீர்கள்.. . ஓகே .. ஒரு சந்தேகம் இப்பேற்பட்டவர்களை தான் உங்களது ஊடகங்களில் 40 ஐ எஸ் தீவிரவாதிகள் சேர்ந்து ஒரே பெண்ணை துன்புறுத்தும் வக்கிரமானவர்கள் , பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தும் ஐ எஸ் தீவிரவாதிகள்.. பெண்களம் ஏலம் மூலம் நிர்வாணமாக காட்டி விற்கும் ஐ எஸ் தீவிரவாதிகள் , என்று விதவிதமான தலைப்புக்களின் மிகவும் கொடூரமானவர்களாக தினம் தினம் செய்தி வெளியிடுகிறீர்கள்.
.
நீங்கள் வெளியிடும் செய்தியை உண்மை என்று வைத்துக் கொண்டாலும் கூட எப்படி ஒரு ஆபாசத்தை வெறுத்த கூட்டம் பெண்களின் ஆபாச படங்களை பத்திரிக்கைககளில் கூட பார்ப்பது தவறு என்றும் அதனால் பல ஆண்டுகள் சிறையில் அடைபட்டாலும் கூட பரவாயில்லை என்று எண்ணிய கூட்டங்கள் இணைந்து அன்று எந்த ஆபாசத்தை எதிர்தனரோ அதே ஆபாசத்தை , கீழ்த்தரமான செயல்களை பெண்களுக்கு எதிராக அரங்கேற்றுகிறார்கள் என்று புது புது தலைப்புக்களின் தினந்தோறும் செய்தி வெளியிடுவதில் உங்களுக்கே முரண்பாடு தோன்றவில்லையா ??
உண்மையில் ஊடகங்கள் கூறுவது போல ஐ எஸ் கொடூரமானவர்களா அல்லது கார்பரேட் ஊடகங்கள் பொய்களின் மூலம் ஐ எஸ் அமைப்பை மக்கள் மத்தியில் இருந்து கொடூரமானவர்களாக சித்தரிக்க உளவியல் ரீதியான அருவருக்கத்தக்க வகையில் செய்தியை வெளியிடுகிறார்களா ?? இது ஒரு பில்லியன் டாலர் கேள்வி தான்
எது எப்படியோ நாம் இன்று பார்க்கும் அனைத்து செய்திகளும் அமெரிக்க ஐரோப்ப்பிய ஊடகங்களின் தழுவல்கள் மட்டுமே என்பது மட்டும் உண்மை. எதுவும் நேரடியான செய்திகள் கிடையாது .46 இந்திய நர்சுகள் விசயத்தில் கூட அந்த பெண்கள் நம் நாட்டை சேர்ந்தவர்கள் என்ற எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் பல தவறான அருவருக்கத்தக்க செய்திகளை வெளியிட்டதும் இதே ஊடகங்கள் தான் .. இவர்கள் கொடுக்கும் செய்திகளின் உண்மை நிலை என்பது 99.9999999% கேள்விக்குறியானதே என்பது மட்டும் உண்மை..

No comments:

Post a Comment