Sunday, February 15, 2015

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு

கடந்த ஆறு மாதங்களாக சரிவை சந்தித்து வந்த கச்சா எண்ணெய்யின் விலை திடீரென மீண்டும் உயர்ந்ததால் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 

அதன்படி, பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 82 காசுகளும், டீசல் விலை 61 காசுகளும் உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த புதிய விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 

டெல்லியில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.56.49-ஆகவும், டீசல் ரூ.46.01 -ஆகவும் விற்கப்பட்டு வருகிறது. புதிய விலை உயர்வின்படி, இன்று நள்ளிரவு முதல் பெட்ரொல் ஒரு லிட்டருக்கு ரூ.57.31-க்கும், டீசல் ரூ.46.62 காசுகளுக்கும் விற்கப்படும். 

கடந்தாண்டு ஆகஸ்டு முதல் பெட்ரொல் விலை 10 முறையும், டீசல் விலை 6 முறையும் குறைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திடீரென விலை உயர்ந்திருப்பது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment