பக்கங்கள்

Monday, January 13, 2014

“பா.ஜ.க.வின் ஃபாசிச முகத்தைத் தோலுரித்துக் காட்டுவோம்!” – பாப்புலர் ஃப்ரண்டின் ஃபாசிச எதிர்ப்புப் பிரச்சாரம்!

popular front
சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பா.ஜ.க.வின் “ஃபாசிச முகத்தைத் தோலுரித்துக் காட்டுவோம்!’‘ என்ற ஃபாசிச எதிர்ப்புப் பிரச்சார இயக்கம் ஒன்றை அறிவித்துள்ளது.
இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் A. ஹாலித் முஹம்மது வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் கூறியிருப்பதாவது:
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும், சமூக நீதிக்கும், மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்க் பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது.

சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்க் பரிவார அமைப்புகள் குளிர் காய்ந்து  வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃபர் நகர் கலவரம்.
இந்த சங்க் பரிவார அமைப்புகளின் அரசியல் பிரிவான பாரதிய ஜனதா கட்சியின் மதவாதம், ஊழல், போலி தேசியவாதம், தீவிரவாதம் போன்ற ஃபாசிச முகத்தைத் தோலுரித்துக் காட்டும் முகமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஃபாசிச எதிர்ப்புப் பிரச்சார இயக்கத்தை மாநில அளவில் நடத்த உள்ளது.
இதன்படி ஜனவரி 2014 முதல் ஏப்ரல் 2014 வரை மாநிலம் முழுவதும் ஃபாசிசத்திற்கு எதிரான நோட்டீஸ்  மற்றும் போஸ்டர் பிரச்சாரம், சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள் மற்றும் தெருமுனைக் கூட்டங்களை நடத்த உள்ளது.
மேலும் அரசியல் தலைவர்கள், அனைத்து இயக்க தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களைச் சந்தித்து ஃபாசிசத்திற்கு எதிராக ஒருங்கிணைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட உள்ளது. தேசத்தின் இறையாண்மைக்கும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், வேற்றுமையில் ஒற்றுமை தத்துவத்திற்கும் எதிராகச் செயல்படும் சங்க் பரிவார ஃபாசிசத்தின் உண்மை முகத்தைத் தோலுரிக்கும் இந்தப் பிரச்சார இயக்கத்தில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அனைத்து தரப்பு மக்களையும் அழைக்கின்றது.
இவ்வாறு ஹாலித் முஹம்மது தனது பத்திரிகைச் செய்தியில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment