
கெய்ரோ: எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை தடை செய்ய நீதிமன்றத்தால் மட்டுமே முடியும் என்று ஸலஃபிகளின் அந்நூர் கட்சி தெரிவித்துள்ளது. இஃக்வானுல் முஸ்லிமீனை தீவிரவாத இயக்கமாக அறிவித்த ராணுவ அரசின் நடவடிக்கையை அந்நூர் கட்சி ஏற்காது என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் யாஸீன் அல் புர்ஹாமி தெரிவித்துள்ளார்.
எகிப்தில் அண்மையில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் இஃக்வானுல் முஸ்லிமீனை அநியாயமாக தொடர்பு படுத்தி அந்நாட்டின் ராணுவ சர்வாதிகார அரசு தீவிரவாத இயக்கமாக அறிவித்திருந்தது. இஃக்வானுக்கு விதிக்கப்பட்ட தடை சட்டரீதியாக செல்லாது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இடைக்கால பிரதமருக்கு ஏதேனும் ஒரு அமைப்பை தீவிரவாத இயக்கமாக தடை செய்ய சட்டரீதியான உரிமை இல்லை என்றும், எகிப்திய பிரதமருக்கு அத்தகைய அதிகாரத்தை அரசியல் சாசனம் வழங்கவில்லை என்றும் சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
No comments:
Post a Comment