பக்கங்கள்

Monday, January 13, 2014

மேற்குக் கரையில் மேலும் 1400 யூத வீடுகளை சட்டவிரோதமாகக் கட்டும் இஸ்ரேல்!


houseமேற்கு கரை: ஃபலஸ்தீனின் மேற்கு கரையிலும், கிழக்கு ஜெருசலத்திலும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் 1400 யூத வீடுகளை கட்டுவோம் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. மேற்கு கரையில் 801 வீடுகளும், கிழக்கு ஜெருசலத்தில் 600 வீடுகளும் கட்டுவதற்கான டெண்டருக்கு இஸ்ரேல் வீடு வசதி துறை அமைச்சகம் நேற்று அழைப்பு விடுத்தது.
இதைத்தவிர இஸ்ரேல் அரசு ஏற்கனவே தீர்மானித்த 532 யூத வீடுகளை கட்டுவதற்கான டெண்டருக்கான அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டு ஃபலஸ்தீனுடன் நேரடியாக பேச்சுவார்த்தையை துவக்கியது முதல் 5439 வீடுகளை இஸ்ரேல் கட்டியதாக யூத குடியேற்ற எதிர்ப்பு மனித உரிமை அமைப்பான பீஸ் நவ் கூறுகிறது.

சர்வதேச சட்டப்படி இஸ்ரேல் வீடுகளை கட்டுவது சட்டவிரோதமாகும்.சட்டவிரோதமாக யூத குடியிருப்புகளை கட்டும் இஸ்ரேலுக்கு  ஐக்கிய நாடுகள் அவையும், ஐரோப்பிய யூனியனும் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

No comments:

Post a Comment