பக்கங்கள்

Monday, December 2, 2013

சனிக்கிழமை விடுமுறை "கட்' தஞ்சை கலெக்டர் அறிவிப்பு

தஞ்சாவூர்: ராஜராஜன் சதய விழாவுக்காக விடப்பட்ட உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக, வரும், 7ம் தேதி தஞ்சை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்கும் என, கலெக்டர் சுப்பையன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சை பெரியகோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜன், 1,028வது சதயவிழாவையொட்டி, தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும், கடந்த மாதம், 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு, விடப்பட்டது.
இதற்கு மாற்றாக, இம்மாதம், 7ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயக்கும்.

No comments:

Post a Comment