கொல்கத்தா: "திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நிதி தேவையெனில் பிச்சை எடுத்தாவது கட்சியை நடத்தலாம்" என்று அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க
முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
சீட்டுக் கம்பெணிகளில் தமது கட்சி நிர்வாகிகள், கட்சி வளர்சிக்காக நிதி பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து, அக்கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இவ்வறு அவர் கூறியுள்ளார்.
மேலும், "கட்சிக்கு நிதி இல்லையெனில் பிச்சை எடுத்தாவது கட்சியை நடத்துவோம்" என்றும் அவர் கூறியுள்ளார். அவ்வாறு சீட்டுக் கம்பெணிகளில் கட்சியினர் நிதி பெறுவதாக தகவல் கிடைக்கும் பட்சத்தில், சம்மந்தப் பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்ந்தால் தான் கட்சியை விட்டே விலகிவிட நேரிடும் என்றும் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.
மேற்குவங்க ராஜ்யசபா உறுப்பினர் குணால் கோஷ், நிதி நிறுவன ஊழல் தொடர்பாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment