பக்கங்கள்

Saturday, December 7, 2013

பிரமிப்பூட்டும் தமிழர்களின் கட்டிடக்கலை..ஆனால் ஏனோ உலக (மேற்கத்திய) அங்கீகாரம் இல்லை ?



உலகின் அதிசயம் என கூறப்படும்
இத்தாலியில் உள்ள பைசா கோபுரம்
மூன்று கட்டமாக 177 வருடங்கள்
கட்டப்பட்டது , இந்த கட்டிடத்தை முதலில்
கட்டும் போது, இதன் கீழ் உள்ள
மண்ணை சோதிக்காமல் , ஒரு கட்டிடம்
கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட
கடைப்பிடிக்காமல் கட்டிட
அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர் ,
இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது,
இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால்
இதன் கட்டுமானம்
சிறிது காலம்


நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர்
தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண்
இதற்கு ஒத்துழைத்தது ! இதனால்
மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது !
ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு
எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக
அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG
8TH 1173 - 1372)
நம் தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர்
போன ராஜா ராஜா சோழனால் கட்டப்பட 216
அடி உலகையே மிரளச்செய்யும்
தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில்
கட்டப்பட்டது ,இது திராவிட கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டு . இதன் கோபுரத்தில் உள்ள
ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ )
எடை கொண்டது , உலகையே வியக்க வைக்கும்
இந்த 1000
வருடங்களாக மேலாக கம்பீரமாக நிற்கும்
கட்டிடம் இன்று வரை எந்த தொழில் நுட்பமும்
இல்லாத அந்த காலத்தில்
எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய்
வைத்துள்ள இப்படிப்பட்ட கட்டிடம் உலக
அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை!
சில நேரங்களில் வெளியில்
உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம்
தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும்
சிறப்பாக
உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !

No comments:

Post a Comment