பக்கங்கள்

Wednesday, December 25, 2013

ஆம் ஆத்மி வெற்றிக்கு முஸ்லிம்களே காரணம் : யோகேந்திர யாதவ் பேட்டி.....!!

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு முஸ்லிம் மற்றும் தலித்
ஓட்டுக்களே முக்கிய காரணம் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஓருவரான யோகேந்திர யாதவ் பேட்டி அளித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது 20 ஆண்டுகாலமாக காங்கிரஸ் வசமிருந்த இஸ்லாமிய வாக்குவங்கி இந்த தடவை ஆம்ஆத்மியின் மதசார்பற்ற, நேர்மையான பிரச்சாரத்திற்காக மாறியிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று தேர்தல் ரிசல்ட் வெளியான அன்றே நாம் இரண்டு பதிவில் கூறியிருந்தோம்.


காவிகள் கூட கை கொட்டி சிரித்தார்கள். ஆனால் அது தான் உண்மை என்று ஆம் ஆத்மி கட்சியே வெளிப்படையாக கூறிவிட்டது.

அதேபோல் உத்தர பிரதேச மாநில தேர்தலில் தோல்வியை தழுவிய மாயாவதி எங்களுடைய தோல்விக்கு முஸ்லிம்களே காரணம். முஸ்லிம்களின் ஒட்டுமொத்த ஓட்டுக்களும் சமாஜ்வாடி கட்சிக்கு விழுந்து விட்டது என்று கூறியிருந்தார்.

அதேபோல் ஆம் ஆத்மி கட்சியும் கூறிவிட்டது. அதேபோல் மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார். மேற்கூறிய மூன்று பேட்டியையும் பதிவாக போட்டிருக்கிறோம் உங்களுக்கு நினைவிருக்கும்...

இந்தியாவிலேயே மிகப்பெரிய சமுதாயமாக இருக்கும் ஒரே சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் ஆகும்.

அந்த முஸ்லிம் சமுதாயம் நினைத்தால் ஆட்சியையே மாற்றவும் முடியும் என்பதை மத்திய காங்கிரஸ் உணர்ந்து உடனடியாக இட ஒதுக்கீட்டை தந்து சட்டம் இயற்ற வேண்டும்.

டெல்லி மாநில தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்கள் காட்டிய வெறும் டிரைலர் மட்டும் தான்.

இட ஒதுக்கீடு தராவிட்டால் மெயின் பிக்சரை பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சந்திக்கும்.

No comments:

Post a Comment