பக்கங்கள்

Monday, December 2, 2013

கஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து: கொள்கையை மாற்றும் பாஜக?


ஜம்மு: ஜம்மு கஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து குறித்து விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாக பாஜக அறிவித்துள்ளது.
இந்தியாவில், ஜம்மு கஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை முழுமையாக நீக்க வேண்டும் என்று கோரி வந்த பாஜக, இந்த அறிவிப்பின் மூலம் இந்த விவகாரத்தில் முதன் முறையாக தனது நிலைப்பாட்டை மாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்முவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜகவின் ‘லால்கர்’ பேரணி என்ற பெயரால் நடைபெற்ற மோடி ஷோவில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான மோடியும்,
தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்கும் ஒரே போல தமது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து மாறுபட்ட கொள்கையை அறிவித்துள்ளனர்.
ஜம்மு கஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு பலனளிக்கிறதா, இல்லையா என்பது குறித்த விவாதம் நடத்தப்பட வேண்டும். அதில் சிறப்பு அந்தஸ்தினால் நன்மை என்று தெரிய வந்தால் அதனை ஏற்கத் தயாராக இருக்கிறோம் என்று மோடி கூறினார்.
மேலும் மோடி கூறியது: அந்தப் பிரிவு ஜம்மு கஷ்மீர் பெண்களின் சம உரிமையைப் பறிப்பதாக அமைந்துள்ளது. மாநில முதல்வர் ஒமர் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லா வேறு மாநிலத்தவரை (சச்சின் பைலட்) திருமணம் செய்து கொண்டதால் அவரது உரிமைகள் பறி போயின.
ஆனால், வெளிமாநிலத்துப் பெண்ணை ஒமர் அப்துல்லா திருமணம் செய்து கொண்டாலும் அவரது உரிமைகள் பறி போகவில்லை. இது பெண்களுக்கு எதிரானஅநீதியாகும்.
சுய நிர்ணய உரிமை: அரசியலமைப்புச் சட்டத்தின் 73-ஆவது திருத்தத்தில் பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொருளாதார அதிகாரம் ஜம்மு கஷ்மீரில் மறுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் சுய நிர்ணய உரிமை குறித்து பேசுப
60 ஆண்டுகளாக சுய நிர்ணய உரிமை குறித்து பேசிப் பேசி, பிரிவினைவாதத்தைதான் அவர்கள் வளர்த்து வருகின்றனர். மாநில சுய நிர்ணய உரிமைக்கு பதிலாக, மாநில வளர்ச்சிக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் அது எவ்வளவோ நன்மை அளித்திருக்கும் என்று மோடி தெரிவித்தார்

No comments:

Post a Comment