Saturday, December 7, 2013

தமிழகத்தில் 33% பாலில் கலப்படம்: யூரியா, சீன பவுடர், மைதா மாவை கலக்கும் கொடூரம்:

உணவிலேயே மிகவும் முக்கியமானது பால். குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு பால் கட்டாயம் தேவைப்படுகிறது.

பாலில் தண்ணீர் ஊற்றி கலப்படம் செய்கின்றனர். மேலும் பாலில் உள்ள கொழுப்புச் சத்துக்களை மட்டும் அகற்றிவிடுகின்றனர். இதனால், பாலின் கெட்டித் தன்மை போய்விடுகிறது. கெட்டித் தன்மைக்காக பாலில் கிழங்கு மாவு, மைதா மாவு மற்றும் அரிசி மாவை கலக்கின்றனர். இது தவிர, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளை மாவை பாலில் கலக்கின்றனர். சீன வெள்ளை மாவு கலந்த பால், சென்னைப் புறநகர் பகுதிகளில் பரவலாக விற்பனை செய்யப்படுகிறது. இதைவிடக் கொடுமையானது பாலின் கெட்டித் தன்மைக்காக யூரியாவை கலப்பது. 10 லிட்டர் பாலுக்கு 5 கிராம் யூரியா கலக்கப்படுகிறது.

கலப்பட பாலை உட்கொள்வதால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதன்மூலம் டைபாய்டு, வயிற்றுப் போக்கு, மஞ்சள் காமாலை, ஊட்டச்சத்து குறைபாடு, உடல் வளர்ச்சி தடைபடுதல், நிமோனியா காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். யூரியா கலந்த பாலினால் சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்படும். ஒரு சில நேரங்களில் குழந்தைகள் இறப்பதற்கும் வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment