பக்கங்கள்

Saturday, November 16, 2013

ஒரு தந்தியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஐ.பி.!


ibபுதுடெல்லி: சி.பி.ஐ.யைத் தொடர்ந்து இந்தியாவின் முக்கிய உள்நாட்டு உளவு நிறுவனமான ஐ.பி. உருவானது குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.
19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு பிரிட்டீஷ் அதிகாரி அனுப்பிய தந்தியின் (டெலிகிராம்) அடிப்படையில் ஐ.பி. உருவாக்கப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய உளவுத்துறையை பாராளுமன்றம்தான் உருவாக்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தின் ஏழாவது அட்டவணை கூறுகிறது. எக்ஸ்க்யூடிவ் ஆர்டர் கூட இல்லாமல் ஐ.பி. உருவாக்கப்பட்டதாக முன்னாள் தரைப்படைத் தளபதி வி.கே. சிங் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் அளித்த பதிலிலும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரிட்டீஷ் ராணியின் கீழ் இருந்த இந்தியாவின் செயலாளர்தாம் 1887-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி ஐ.பி.யை உருவாக்க கோரி தந்தி அனுப்பினார். இந்தியாவில் அரசியல் விவகாரங்களை அறிய ரகசிய உளவுப் பிரிவை உருவாக்க வேண்டும் என்ற லார்ட் டஃபரின் சிபாரிசைத் தொடர்ந்து தந்தி அனுப்பப்பட்டது.
‘கொள்ளைக்காரர்கள் மற்றும் ரவுடிகளை’ கவனிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த போலீஸ் சூப்பிரண்டிடம் ஐ.பி.யின் பொறுப்பை டஃபர் ஒப்படைத்தார் என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. “பாராளுமன்றத்தின் கீழா ஐ.பி. இயங்குகிறது?” என்பதைத் தெளிவுப்படுத்த வி.கே. சிங் தனது மனுவில் கோரியிருந்தார்.
பாராளுமன்றத்தின் கண்காணிப்பின் கீழ்தான் ஐ.பி. இயங்குவதாகவும், பாராளுமன்ற ரிகன்சர்வேட்டிவ் கமிட்டியின் ஐ.பி. இயக்குநர் ஆஜராக வேண்டும் என்பது சட்டமாகும் என்று மத்திய அரசு பதில் அளித்திருந்தது.
எந்த அதிகாரியையும் அழைக்க பாராளுமன்ற ரிகன்ஸர்வேடிவ் கமிட்டிக்கு அதிகாரம் உண்டு. ஆனால், கடந்த 3 வருடங்களில்தான் ஐ.பி. இயக்குநரை சந்திக்கவே இல்லை என்று கமிட்டியின் சிறப்பு அழைப்பாளரும், காங்கிரஸ் எம்.பி.யுமான மஹாபல் மிஸ்ரா கூறுகிறார்.
உளவுத்துறை ஏஜன்சிகளை உருவாக்கியதன் குறைபாடுகளை செய்தி ஒலிபரப்பு அமைச்சர் மனீஷ் திவாரி தனது ஆய்வில் சுட்டிக்காட்டியிருந்தார். 1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் ஐ.பி. விவகாரத்தில் இந்தியா காலனி ஆதிக்கக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாக முக்கியமாக குற்றம் சாட்டப்படுகிறது.

No comments:

Post a Comment