Flash News : அதிரையருகே முஸ்லீம் பெண்களை மானபங்கபடுத்த முயற்சி !!
முத்துபேட்டை லகூன் தீவை காண இன்று கேரளா சுற்றுலா பயணிகள் சிலர் சென்றுள்ளனர். சுற்றுலாவை முடித்து தங்களது சொந்த ஊருக்கு தம்பிக்கோட்டை வழியாக சென்று கொண்டிருக்கும் பொழுது, வாகனத்தை வழி மறித்த ஒரு சிலர் வாகனத்தில் உள்ள பெண்களை ஜன்னல்வழியாக கைகளை விட்டு மானபங்க படுத்த முயன்றுள்ளனர்.
அதிரை காவல் நிலையம் முன்பு கூடிய மக்கள்
சுதாரித்துகொண்ட வானகத்தின் ஓட்டுனர் வாகனத்தை வேகமாக ஓட்டி பாதிக்கப் பட்டவர்கள் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் அதிரை காவல்துறை ஆய்வாளர் ரவிசந்திரன் தலைமையில் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று சம்பந்த பட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


No comments:
Post a Comment