பக்கங்கள்

Tuesday, November 19, 2013

எகிப்து:வாகனங்கள் மீது ரெயில் மோதி விபத்து:26 பேர் பலி!

கெய்ரோ:எகிப்தில் வாகனங்கள் மீது சரக்கு ரயில் மோதியதால் நேரிட்ட விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து மீட்புப்பணிக்குழுவைச் சேர்ந்த அதிகாரி கூறியதாவது: எகிப்து தலைநகர் கெய்ரோவின் தெற்குப் பகுதியிலுள்ள பெனி சூயிஃப் நகரிலிருந்து சரக்கு ரயில் ஒன்று மற்றொர் இடத்திற்குச் சென்று கொண்டிருந்தது. தாஹ்சூர் என்ற கிராமத்தின் அருகே ரயில் வந்தபோது, தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 3 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் கெய்ரோ நகரில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு திரும்பும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரி கூறுகையில், “”விபத்து நடந்ததற்கான காரணங்கள் உடனடியாகத் தெரியவில்லை. விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்” என்றார்.

No comments:

Post a Comment