Saturday, October 19, 2013

தமுமுக நிர்வாகி படுகொலை : பதட்டத்தில் சிவகங்கை!


சிவகங்கை :சிவகங்கை நகர தமுமுக தலைவராக பொறுப்பு வகித்தவர் அப்துல் மாலிக் (வயது 38).
இவர் கடந்த மாதம் 27ஆம் தியதி இரவு 9 மணி அளவில் மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மர்ம கும்பலால் வெட்டப்பட்டார்.  உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்த அப்துல் மாலிக் நேற்று முன் தினம் இறந்தார்.
இத்தாக்குதலை கண்டித்து, சிவகங்கையில் கடைகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும். இறந்து போன அப்துல் மாலிக்-ன் உடல் நேற்று சிவகங்கை, கென்னடி தெருவில் இருக்கும் அவரது இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டது.  இதனையொட்டி. நேரு பஜார் மற்றும் காந்தி வீதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.  இந்நிலையில், கடைகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல் வந்ததால், பதட்டம் நீடிக்கிறது.

No comments:

Post a Comment