
பாட்னா: இந்தியாவின் வடக்கு மாநிலமான பிஹாரில் பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் மேலும் 5 பேரை விசாரணைகளுக்காக தடுத்து வைத்துள்ளதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடவுள்ள நரேந்திர மோடி, பாட்னாவில் பேசவிருந்த மைதானத்துக்கு அருகே இந்தத் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன.
இந்தக் குண்டுத் தாக்குதல்களில் 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 102 பேர் காயப்பட்டனர். எந்தவொரு அமைப்பும் இந்த தாக்குதல்களுக்கு உரிமை கோரவில்லை. குண்டுத் தாக்குதல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபரையும் மேலும் மூன்று நபர்களையும் பாட்னாவில் கைது செய்ததாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மற்ற இரண்டு பேரும் அண்டை மாநிலமான ஜார்க்கண்டில் கைதாகியுள்ளனர். நரேந்திர மோடியின் பேச்சைக் கேட்பதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த நிலையிலேயே இந்தக் குண்டுவெடிப்புகள் நடந்தன.
No comments:
Post a Comment