
ஜெருசலம்: ஃபலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையின் தொடக்கமாக அந்நாட்டு சிறையில் இருக்கும் 26 ஃபலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஃபலஸ்தீனத்திற்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளதன் காரணமாக
அந்நாட்டுச் சிறையில் இருக்கும் 104 ஃபலஸ்தீன கைதிகளை 2014ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நான்கு கட்டமாக விடுவிப்பதாக இஸ்ரேல் அறிவித்திருந்தது.
இதையடுத்து கடந்த 1993-ஆம் ஆண்டு இஸ்ரேலால் அநியாயமாக கைது செய்யப்பட்டு அந்நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 26 ஃபலஸ்தீனியர்களை இரண்டாம் கட்டமாக இஸ்ரேல் திங்கள்கிழமை விடுவித்தது.
முதல் கட்டமாக கடந்த ஆகஸ்ட்டில் 26 ஃபலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்திருந்தது.
No comments:
Post a Comment