
தோடா கல்யாண்பூர்: முஸஃபர்நகர் மாவட்டத்தின் புடானா தாலுகாவில் உள்ள தோடா கல்யாண்பூர் கிராமத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை எளிமையான துவக்க நிகழ்ச்சியின் மூலம் பாப்புலர் ஃப்ரண்ட் துவங்கியது. இந்நிகழ்ச்சியில் கலவரத்தால் பாதிக்கப்பட்டு குடியமர்த்தப்பட்ட மக்கள், சமூக தலைவர்கள் மற்றும் பாப்புலர் ஃப்ரண்டின் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொது செயலாளர் O.M.A. சலாம் அவர்கள் இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியதாவது:
“மனிதத் தன்மையற்ற எதிரிகளால் நடத்தப்பட்ட மனித தாக்குதலில் பலிகடாக்களாக்கப்பட்ட எங்கள் சகோதர, சகோதரிகளுக்கு எங்கள் கடமையை செய்கின்றோம். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்று தருவதில் பாப்புலர் ஃப்ரண்ட் முன்னணி இயக்கமாக செயல்பட்டு வருகிறது.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் இந்திய அரசியல் அமைப்பு வழங்குகின்ற நீதியைப் பெற்றுத் தருவோம், தேவையான சட்ட ரீதியான உதவிகள் மற்றும் வேறுபட்ட இரு சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமை ஏற்படுத்துவோம்.
இரண்டு போர்வைகள், இரண்டு பக்கெட்கள், மற்றும் வீட்டிற்குத் தேவையான உபயோகப் பொருட்கள் ஆகியவை நிவாரணப் பொருட்களாக அந்த கிராமத்தில் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. இந்த வாரத்தில் முதற்கட்டமாக பிற பகுதிகளிலிருந்து இங்கு இடம் பெயர்ந்து வந்து பல்வேறு நிவாரண முகாம்களிலும், வீடுகளிலும் தங்கியுள்ள 14 கிராமத்தின் 3000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும்.
கிராமக் கணக்கெடுப்புக் குழு, சட்ட ரீதியான நடவடிக்கைக் குழு, நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கும் குழு என மூன்று குழுக்களை ஏற்படுத்தி இலக்கு நிர்ணயக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன.
இந்தக் குழுக்கள் நிவாரணப் பொருட்கள் வழங்குவதுடன், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டறிந்து அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, பாதிக்கப்பட்ட நபர்களின் தகவல்களையும் சேகரித்து தன்னார்வத் தொண்டர்கள் மூலமாக அவர்களுக்கு சட்ட ரீதியான உதவிகளையும் செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாப்புலர் ஃப்ரண்டின் உறுதியான தன்னார்வத் தொண்டர்களின் இந்த உன்னதமான செயலை அவர் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் உத்திர பிரதேச மாநிலத் தலைவர் வசீம் அஹமது, சௌத்ரி முகமது முர்தஜா, மௌலானா முகமது சதாப் ஆகியோர் பங்கேற்றனர்.
- See more at: http://www.thoothuonline.com/%e0%ae%95%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d/#sthash.E2Slcc8V.dpuf
No comments:
Post a Comment