Tuesday, September 24, 2013

கலவரத்தைத் தூண்டிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு வரவேற்பு அளித்த சிறை அதிகாரிகள் மீது விசாரணை!


லக்னோ: முஸஃபர்நகர் கலவரத்தை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கைதான பா.ஜ.க. எம்.எல்.ஏ. சங்கீத் சோமிற்கு சிறையில் வரவேற்பு அளித்த சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உ.பி. மாநில அரசு அறிவித்துள்ளது.
சிறையில் சல்யூட் செய்வதற்கான சட்டமோ, எம்.எல்.ஏ.க்களுக்கு என்று தனியாக ப்ரோட்டோகோலோ (நெறிமுறைகள்) கிடையாது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உ.பி. மாநில சிறை அமைச்சர் ராஜேந்திர சவுத்ரி கூறியுள்ளார்.
சர்தானா சட்டப்பேரவை தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான சங்கீத் சோமை முஸஃபர்நகர் நீதிமன்றம் இம்மாதம் 2-ஆம் தேதி
14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட சங்கீத் சோமிற்கு சிறை அதிகாரிகள் சல்யூட் அடித்தும், கை கூப்பியும் வரவேற்பு அளித்தனர். இதன் வீடியோ வெளியானதை தொடர்ந்து பெரும் சர்ச்சை கிளம்பியது.

No comments:

Post a Comment