பக்கங்கள்

Wednesday, July 3, 2013

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு:பெரும்புள்ளிகளை தப்பிக்க வைக்க முயற்சி!-கொல்லப்பட்ட ஜாவேதின் தந்தை கோபிநாத் பிள்ளை!


gopinatha pillai
ஆலப்புழா(கேரளா):மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகளை போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்த சம்பவத்தில் பெரும்புள்ளிகளை தப்பிக்க வைக்க முயற்சி நடப்பதாக சந்தேகிப்பதாக, இஷ்ரத் ஜஹானுடன் கொல்லப்பட்ட கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சார்ந்த ஜாவேத் ஷேக்கின்(இவரது முந்தைய பெயர் பிராணேஷ் குமார்) கோபிநாத் பிள்ளை தேஜஸ்பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அவர் தனது பேட்டியில் கூறியிருப்பது: 2004-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியின் வாயிலாக சி.பி.ஐ விசாரணையை நீதிமன்றம் மூலம் பெற்றோம்.
தற்போதைய செய்திகளை பார்க்கும்போது சி.பி.ஐ பல்டியடிக்கிறதா? என்று சந்தேகம் எழுகிறது. வெள்ளை தாடிக்காரனுக்கும், கறுப்பு தாடிக்காரனுக்கும் தெரிந்தே போலி என்கவுண்டர் நடந்தது என்பதை சி.பி.ஐ தான் தெரிவித்தது. ராஜேந்தர் குமார் என்ற ஐ.பி அதிகாரிதான் ஜாவேத் உள்ளிட்ட நான்குபேரை அழைத்து வந்தார் என்றும், பி.பி பாண்டே குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலைச் செய்ய தீவிரவாதிகள் என்றதவறான தகவலை போலீசுக்கு அளித்து நிரபராதிகளை கொடூரமாக கொலைச் செய்ய காரணமாக இருந்தார் என்றும் சி.பி.ஐதான் கூறியது.
எனினும், குற்றப்பத்திரிகையில் ராஜேந்தர் குமாரின் பெயர் இல்லை என்று கூறப்படுகிறது. இவ்வழக்கில் இன்னொரு குற்றவாளியான பி.பி.பாண்டே தேடப்படும் குற்றவாளி என்று சி.பி.ஐ கூறுகிறது. குஜராத்தின் உயர் பதவியில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரியை கண்டுபிடிக்க சி.பி.ஐயால் முடியவில்லை என்பதை நம்ப முடியவில்லை. மோடி, அமித் ஷா, ராஜேந்தர் குமார் போன்ற பெரும்புள்ளிகளை தவிர்த்து சாதாரண போலீஸ்காரர்கள் மீது குற்றம் சாட்டி இவ்வழக்கை மூடுவதற்கான முயற்சி நடக்கிறதோ என்று சந்தேகம் எழுகிறது.
தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபரின் சொத்துக்களை பறிமுதல் செய்வது உள்பட ஏராளமான தொடர் நடவடிக்கைகள் உள்ளன.இத்தகைய எந்த நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.சமூகத்தில் பெரிய நபர்களுக்கும், சாதாரண நபர்களுக்கும் இரட்டை நீதியா இந்நாட்டில் உள்ளது? என்று கோபிநாத் பிள்ளை கேள்வி எழுப்புகிறார்.சட்டமும், நீதியும் ஏழைகளுக்கு உதவுவதற்காகும். இவ்வாறு கோபிநாத் பிள்ளை கூறினார்.

No comments:

Post a Comment