பக்கங்கள்

Tuesday, July 2, 2013

இந்து முன்னணி மாநிலச் செயலர் கொலை - வேலூரில் பதற்றம்!

வேலூர்: இந்துமுன்னணி மாநிலச் செயலாளர்  சு.வெள்ளையப்பன் வேலூரில் மர்ம நபர்களால் கொலை செய்யப் பட்டுள்ளார்.
நேற்று மதியம் 3.15 மணியளவில்  வேலூர் பேருந்து நிலையம் அருகே அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் அரசு உடமையாக்கப்பட்டது. இதை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பினர் கடந்த இரண்டு வார காலமாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளையன் இன்று படுகொலை செய்யப் பட்டுள்ளார்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்த்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த சில வருட காலமாகவே வேலூரில் அரசியல் படுகொலை நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment