இந்நிலையில் டெல்லியில் இண்டர்போல் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியி கலந்துகொண்ட சி.பி.ஐ தலைமை இயக்குநர் ரஞ்சித் சின்ஹா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்குபேர் போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் ஐ.பி சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமாரை கைதுச் செய்வதற்கான எதிர்ப்புகள் குறைந்துவருவதாக கருதப்படுகிறது.குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று சுஷில்குமார் ஷிண்டேவும் தெரிவித்துள்ளார். பிரதமரின் அலுவலகமும் ராஜேந்தர் குமாரை கைதுச் செய்வதற்கு ஆதரவாக உள்ளது.
No comments:
Post a Comment