இன்று காலை நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் வந்த அத்வானி. அங்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மோகன் பாகவத், பையாஜி ஜோஷி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அத்வனி மோடியுடன் ஒற்றுமையுடன் செயல்படுவது குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
நரேந்திர மோடியை பா.ஜ.க முன்னிலைப் படுத்துவதற்கு அத்வானி எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment