Sunday, July 7, 2013

ஆப்பிரிக்க யூனியனில் இருந்து எகிப்து நீக்கம்!

அடிஸ் அபாபா:ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் எகிப்திய அதிபரான முஹம்மது முர்ஸியை ராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியில் இருந்து நீக்கியதை தொடர்ந்து அந்நாடு ஆப்பிரிக்க யூனியனில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட முஹம்மது முர்ஸிக்கு ஆதரவாக எகிப்து முழுவதும் போராட்டம் வலுப்பெறும் வேளையில் 54 உறுப்பினர்களை கொண்ட ஆப்பிரிக்க யூனியன் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அரசியல் சாசனம் புனரமைக்கும் வரை ஆப்பிரிக்க யூனியன் சட்டத்தின் படி எகிப்தை சஸ்பெண்ட் செய்ய யூனியன் பீஸ் அண்ட் செக்யூரிட்டி கவுன்சில் முடிவுச் செய்துள்ளதாக
அதன் செயலாளர் தெரிவிக்கிறார்.அரசியல்சாசனத்தின் அடிப்படையிலான அரசுக்கு தடை உருவாக்கும் சூழலில் அந்நாட்டை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது ஆப்பிரிக்க யூனியனின் வழக்கமாகும்.

No comments:

Post a Comment