பக்கங்கள்

Thursday, July 4, 2013

தஹ்ரீர் சதுக்கத்தில் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை!

கெய்ரோ:அதிபர் முஹம்மது முர்ஸிக்கு எதிராக தஹ்ரீர் சதுக்கத்தில் எதிர்கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.இதனை மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்  தெரிவித்துள்ளது.
ஏராளமான பெண்கள் பாலியல் அத்துமீறல்களை சந்தித்துள்ளனர். 91 பெண்கள் சதுக்கத்தில் வைத்து பாலியன் வன்கொடுமைச் செய்யபப்ட்டுள்ளனர். நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழலை பயன்படுத்தி இந்த அக்கிரமங்கள் நடந்துள்ளன. பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக
செயல்படும் அமைப்பிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் இந்த அறிக்கையை அளித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 46 பெண்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. திங்கள் கிழமை 17உம், செவ்வாய்க்கிழமை 23உம் சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை நடந்த ஐந்து சம்பவங்களை வெளியுலகம் அறியவில்லை என்று இன்னொரு பெண்கள் அமைப்பு கூறுகிறது. பல தாக்குதல் சம்பவங்களும் பெண்களின் துணையோடு நடந்தது என்று ஹியூமன்ரைட்ஸ் வாட்சின் மேற்காசியா துணை இயக்குநர் ஜோ ஸ்டோர்க் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment