புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகள் போலி என்கவுண்டரில் அநியாயமாக படுகொலைச் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இஷ்ரத் உள்ளிட்ட நான்கு பேர் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட வழக்கில் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் பங்கினை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த நாக்பூரில் உள்ள சி.பி.ஐ எஸ்.பி சந்தீப் மதுகர் தாம்கட்ஜேவுக்கு கடந்த சில தினங்களாக தொலைபேசியில் கொலைச் செய்துவிடுவோம் என்று மிரட்டல் வருவதாக சி.பி.ஐ மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அளித்துள்ள புகாரில் கூறியுள்ளது.
இதுக்குறித்து சி.பி.ஐ இயக்குநர் ரஞ்சித் சின்காவிடம் கேட்டபோது, ‘இஷ்ரத் என்கவுண்டர்’ வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்படி மராட்டிய அரசுக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதி இருப்பதாக கூறியுள்ளார்.
No comments:
Post a Comment