Thursday, July 4, 2013

ஸாதிக் ஜமால் போலி என்கவுண்டர் வழக்கு:தொடர் விசாரணை இல்லை!

1356173269_1356101215_Sadiq-jamal-case

அஹ்மதாபாத்:ஸாதிக் ஜமால் போலி என்கவுண்டர் வழக்கில் தொடர் விசாரணைக்கு உத்தரவிடமுடியாது என்று சி.பி.ஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஸாதிக் ஜமால் போலி என்கவுண்டர் வழக்கில் அன்றைய குஜராத் இண்டலிஜன்ஸ் பீரோ அதிகாரி ராஜேந்தர் குமார், முன்னாள் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ஆகியோரின் பங்கினைக் குறித்து விசாரணைச் செய்ய சி.பி.ஐக்கு உத்தரவிடக்கோரி ஸாதிக் ஜமாலின் சகோதரர் ஷபீர் ஜமால் சி.பி.ஐ நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.

வழக்கில் விசாரணை நடப்பதாகவும், மனுதாரர் சுட்டிக்காட்டியவைக் குறித்தும் விசாரணை நடப்பதாகவும், துணை குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல்ச் செய்யப்படும் என்றும் சி.பி.ஐ நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து மேற்கண்ட உத்தரவை நீதிபதி தெரிவித்தார்.2003-ஆம் ஆண்டு ஸாதிக் ஜமால் போலி என்கவுண்டரில் அநியாயமாக படுகொலைச் செய்யப்பட்டிருந்தார்.

No comments:

Post a Comment