பக்கங்கள்

Sunday, July 7, 2013

பாலியல் பலாத்காரம்:மத்திய பிரதேச பா.ஜ.க நிதி அமைச்சர் நீக்கம்!


raghavji_350_070513011833போபால்:வீட்டு வேலைக்காரனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மத்திய பிரதேச மாநில பா.ஜ.க அரசின் நிதியமைச்சரான ராகவ்ஜி தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளார். ராஜ்குமார் டாங்கி என்பவர் 79 வயது பா.ஜ.க அமைச்சர் மீது பாலியல் பலாத்கார வழக்கை தொடுத்துள்ளார். ஒரு பெண்ணுடன் ராகவ்ஜி தனது படுக்கையை பங்கிடும் காட்சிகள் அடங்கிய சி.டி தன் வசம் உள்ளதாக கூறும் பிரமாணப்பத்திரத்தையும் டாங்கி புகாருடன் அளித்துள்ளார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ராகவ்ஜியை அழைத்து ராஜினாமச் செய்யக்கோரினார். முதல்வரின் ஆலோசனையை ஏற்று தான் ராஜினாமாச் செய்வதாக ராகவ்ஜிதெரிவித்துள்ளார். இயற்கைக்கு முரணான பாலியல் வேட்கைக்கு தன்னை ராகவ்ஜி நிர்பந்தித்ததாக ராஜ்குமார் டாங்கி தனது புகாரில் தெரிவித்துள்ளார். ராஜ்குமாரின் விரிவான வாக்குமுலத்தை பதிவுச் செய்த பிறகு ராகவ்ஜி மீது வழக்கு தொடரப்படும்.
2004-ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் மத்தியபிரதேச மாநில சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல்ச் செய்த ராகவ்ஜி, தனது அரசியல் வாரிசாக மகளை கொண்டுவர திட்டமிட்டிருந்தார் என கூறப்படுகிறது. ராகவ்ஜி மீதான குற்றச்சாட்டை அவரது மனைவியும், மகளும் மறுக்கின்றனர். சட்டப்பேரவை தேர்தலுக்கு ஏதேனும் சில மாதங்களே உள்ள நிலையில் பா.ஜ.கஅமைச்சர் ஒருவர் பாலியல் பலாத்கார புகாரில் சிக்கியிருப்பது அக்கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.இவ்விவகாரம் வெட்கக்கேடு என்றும் உடனடியாக வழக்குப்பதிவுச் செய்யவேண்டும் எனவும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்
முகேஷ் நாயக் தெரிவித்துள்ளார்.ராகவ்ஜியை உடனடியாக கைதுச் செய்யக்கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் ஹபிப்கஞ்ச் போலீஸ் ஸ்டேஷன் முன்பாக போராட்டம் நடத்தினர்.

No comments:

Post a Comment