பக்கங்கள்

Saturday, July 13, 2013

மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - மோடியின் சர்ச்சைக்குரிய பேட்டியால் பரபரப்பு!


குஜராத் கலவரம் காலத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எடுத்த
நடவடிக்கைகள் சரியானதுதான் என்று மோடி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
கடந்த 2002-ம் ஆண்டில் கோத்ரா ரெயில் எரிப்பைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் பயங்கர வகுப்பு கலவரம் மூண்டு ஏராளமானவர்கள் பலியானார்கள். அப்போது அந்த மாநிலத்தின் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் நரேந்திரமோடி.
இந்த நிலையில் தனியார் வெளிநாட்டு செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "கலவர காலத்தில் நான் எடுத்த நடவடிக்கைகள் சரியானதுதான்,
நான் ஏதாவது தவறு செய்து இருந்தாலோ அல்லது திருடியிருந்தாலோ எனக்கு மனக்கஷ்டம் வரும். இந்த பிரச்சினையில் அதுபோன்று எதுவும் இல்லை.
ஒரு காரை ஓட்டிச்சென்றால், அல்லது வேறு ஒருவர் ஓட்ட நாம் பின்னால் அமர்ந்து செல்லும்போது எதிர்பாராதவிதமாக காரின் சக்கரத்தில் ஒரு நாய்குட்டி சிக்கிக் கொண்டால் அது சங்கடத்தைத் தரும் அதுபோலத்தான் நான் நான் முதல்வராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் மனிதநேய அடிப்படையில் வருத்தம் அடைவேன்" என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே மோடியின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்களை நாய்குட்டிக்கு இணையாக பேசி அவமானப் படுத்டியுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் மோடி இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அஜய் மக்கான் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment